நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இன்றி எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், அதை எப்படி ஆன்லைன் மூலம் பெற வேண்டும் என தெரியுமா..?
டூப்ளிகேட் ஆதார் பெறுவது எப்படி..?
* முதலில் https://uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
* அதில், ‘My Aadhaar’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ‘Order Aadhaar Reprint’ என்ற ஆப்சனைத் தேர்வு செய்ய வேண்டும்.
* பின்னர், 12 இலக்க ஆதார் எண் அல்லது 16 இலக்க Virtual ID ஐ பதிவிட்ட பிறகு, பக்கத்தில் காட்டப்படும் கேப்ட்சாவை தேர்ந்தெடுத்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
* இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி வரும். அதை பதிவிட்டு உறுதிபடுத்த வேண்டும்.
* பின்னர், உங்கள் ஆதார் விவரங்கள் திரையில் தோன்றும். அதனை சரிபார்த்து, ரீபிரிண்ட் சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
* பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு புதிய ஆதார் கார்டு அனுப்பி வைக்கப்படும். இதற்கான Service Request Number எண்ணும் உங்களுக்கு கிடைக்கும்.
* மேலே கூறப்பட்டுள்ளபடி, உங்களுடைய ஆதார் கார்டை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், அவசர தேவைகளுக்கு விண்ணப்பித்த பிறகு இ-ஆதார் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
* ஏதேனும் சந்தேகங்களுக்கு, UIDAI-யின் தொலைபேசி எண்: 1947 அல்லது email: phonehelp@uidai.gov.in முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம்.