“டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்” நவம்பர் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் முகாம் நடைபெறும்…!

pension 2025

நாடு தழுவிய “டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்” பிரச்சாரம் 4.0-ன் கீழ், டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த ஓய்வூதியதாரர்கள் முகாமை, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.


தேசிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC) பிரச்சாரம் 4.0-ன் கீழ் டெல்லியில் பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த மெகா ஓய்வூதியதாரர்கள் முகாமை நேற்று மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்து, ஓய்வூதியதாரர்களிடம் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்; டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பதற்கு அரசு எடுத்த முயற்சியை இது எடுத்துக்காட்டுகிறது. நாடு தழுவிய டிஎல்சி பிரச்சாரம் 4.0, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து நவம்பர் 1 முதல் 30, 2025 வரை நடத்தப்படுகிறது. நாட்டின் தொலைதூர மூலைகளில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களையும் சென்றடையும் நோக்கில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

இந்த முகாம் ஓய்வூதியதாரர்களின் வசதிக்காகவும் வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு வசதி குறித்து பயனாளிகள் மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

Vignesh

Next Post

Rasi Palan | இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படும்.. ஒவ்வொரு ராசிக்கும் இன்றைய தினம் எப்படி இருக்கும்..? - பிரபல ஜோதிடர் விளக்கம்..

Tue Nov 4 , 2025
Rasi Palan | These zodiac signs will experience sudden financial gains.. How will each zodiac sign look today..?
Rasi Palan Rasi Palan

You May Like