தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை…! விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள்…!

College students 2025

தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: மத்திய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு ஜூலை பருவத்துக்கான மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடங்கப்பட்டுள்ளது.

கலை, அறிவியல், வணிகம், இதழியல் மற்றும் மக்கள்தொடர்பு, சட்டம், கல்வி, மேலாண்மை, சமூக அறிவியல், தொழில்சார் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு குறிப்பிட்ட இளங்கலை படிப்புகளில் கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம்.

இக்னோ பல்வேறு ஆன்லைன் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இதில் சேர https://ignouiop.samarth.edu.in http://https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

ராகு கேது பெயர்ச்சி: ஜூலை 20-க்கு பிறகு இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் தான்..!!

Fri Jul 18 , 2025
Rahu Ketu Transit: After July 20, it's jackpot for these 3 zodiac signs..!!
zodiac

You May Like