அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நேர்முகத்தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட நிலையில் எழுத்து தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஏற்கனவே அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்க மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டி.இ.டி. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.
அதனை தொடர்ந்து டி.இ.டி. முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக TET இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 4,000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே 4000 துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது கல்லூரி பேராசிரியர்கள் இடமாற்றம் தொடர்பான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். இதில் 5,408 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.