fbpx

மகளை கர்ப்பமாக்கிய காமக்கொடூரன் … கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்… பரபரப்பு சம்பவம்

கடலூர் மாவட்டத்தில் தனது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூரனை பெண்ணின் தாய் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் குறவன்பாளையம் என்ற கிராமம் உள்ளது . அப்பகுதியில் சிவமணி என்ற 37 வயது நபர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி சத்யா .. இவர்களுக்கு சதீஷ்என்ற சிறுவன் இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளான்.

இதனிடையே சவாரிக்கு செல்வதாக மனைவி சத்யாவிடம் புறப்பட்டு சென்ற சிவமணி நீண்ட நேரமாகியும் வரவில்லை இதனால் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது எஸ்.புதூர் பகுதியில்உள்ள வாழைத்தோப்பில் சடலாக சிவமணி கண்டெடுக்கப்பட்டார். அவர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். செல்போனில்  கடைசியாக யார் அழைத்தது என விசாரித்தபோது அவருக்கு வனிதா என்ற பெண் தொடர்பு கொணடு அழைத்துள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் , சாராய வியாபாரியான வனிதாவுக்கும் ஆட்டோ ஓட்டுனர் சிவமணிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்தப் பழக்கத்தால் அடிக்கடி வனிதா வீட்டுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அவரது மகளையும் வளைத்து போட நினைத்த சிவமணி ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் கர்ப்பமானார். விஷயம் வனிதாவுக்கு தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த வனிதா மகளை கர்ப்பமாக்கிய காமக் கொடூரனை கொலை செய்ய திட்டமிட்டாள். பின்னர் தனியாக வருமாறு அழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றாள். இதையடுத்து போலீசார் கைது செய்து வனிதாவிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் 2 பேரை இந்த கொலை வழக்கில் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Post

உயர்நீதிமன்றத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு ! ஜாதி சான்றிதழ் வழங்காததால் நடந்த துயரம்…

Tue Oct 11 , 2022
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் தன் மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு பல நாட்கள் போராடியுள்ளார். மாவட்டஅரசு அலுவலகம் , தாசில்தார் அலுவலகங்களுக்கு நடையோ நடை என நடந்துள்ளார். வருவாய் அலுவலகம் , கிராம நிர்வாக அலுவலகம் என மாறி மாறி சென்று சாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்து மகனுக்கு சாதி சான்றிதழ் […]

You May Like