வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடதிசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ம் தேதி புயலாக உருவாக உள்ளது . இந்த புயல் சின்னம் 25ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு சித்ரங் என பெயரிடப்பட்டுள்ளது. வங்க தேசம் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புதிய புயலால் எந்தெந்த பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்பதை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. அடுத்த நான்கு நாட்களில் இந்தியாவின் கிழக்கு கடற்கரை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் , ஒடிசா, மேற்கு வங்கம் , பங்களாதேஷ் மற்றும் கடலோர மாவட்டங்களில் புயல் காற்று மற்றும் மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..