fbpx

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலைமறியல்

கருக்கலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு வந்த பெண் உயிரிழந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூவாடு கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி பெரியநாயகம் (37). இவருக்கு வேணுகோபால், ஐயப்பன் ஆகிய இரண்டு மகன்களும், மஞ்சமாதா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், பெரியநாயகம் கர்ப்பமுற்ற நிலையில், கருக்கலைப்பு செய்வதற்காக நேற்று தியாகதுருகம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும், இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி பெரியநாயகம் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலைமறியல்

இதனையடுத்து, பெரியநாயகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நள்ளிரவில் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த கள்ளக்குறிச்சி கூடுதல் எஸ்.பி. ஜவஹர்லால் தலைமையில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெரியநாயகத்தின் உறவினர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறிமலை கைவிட்டு கலைத்து சென்றனர். தொடர்ந்து பெரியநாயகியின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Chella

Next Post

அச்சுறுத்தும் குரங்கு அம்மை... கேரளாவில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி...

Tue Aug 2 , 2022
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது கொரோனா பீதிக்கு மத்தியில் உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 78 நாடுகளில் இருந்து 18,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனிடையே ஆந்திரா மற்றும் […]
’குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர்’..! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்..!

You May Like