தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.இந்த திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறையினர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அப்போது திருட்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே இருக்கின்ற உன்மத கூடம் ஊராட்சிக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் சுமார் 300 வருடங்கள் பழமையான ஸ்ரீ பிடாரி செல்லியம்மன் கோவில் இருக்கிறது. இடையூறு வீரக்குப்பம் பல்லவீரக்குப்பம் போன்ற கிராம பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தேவதையாக இந்த அம்மனை வழிபட்டு வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் நேற்றைய தினம் காலை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அந்த கோவில் அருகே சென்று கொண்டு இருந்த சமயத்தில், ஆலயத்தின் பூட்டை யாரோ உடைத்திருப்பது தெரியவந்தது. இந்த தகவல் தெரிந்தவுடன் கிராம மக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்த போது செல்லியம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போயிருந்தது.
அதோடு, பீரோ கதவு உடைக்கப்பட்டு 20 சவரன் நாகை, வெள்ளி, கொலுசு மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
அத்துடன் கோவில் அருகே திருப்பணிகள் நடைபெற்று வரும் பெருமாள் ஆலயத்திலும் மர்ம நபர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டியுள்ளார்கள். ஆனால் திருப்பணிகளின் காரணமாக, ஆலயத்தில் இருந்த பழமையான சிலைகள் ஏற்கனவே வேறு இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டிருந்ததால் அந்த பழமை வாய்ந்த சிலைகள் இந்த திருட்டிலிருந்து தப்பிவிட்டனர்.
இது குறித்து கிராம மக்கள் மற்றும் அறநிலையத்துறை சார்பாக வழங்கப்பட்ட புகாரினடிப்படையில் திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.