fbpx

மதுபாட்டிலில் செத்துக் கிடந்த ‘ஈ’ … அதிர்ச்சி அடைந்த குடிமகன்…!

தென்காசி மாவட்டத்தில் மதுபாட்டிலில் ‘ஈ’ செத்துக் கிடந்ததை பார்த்து குடிமகன் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் சுகாதாரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த காலங்களில் மது பாட்டில்களில் பல்லி, பூச்சி போன்ற உயிரினங்கள் பாட்டிலுக்குள் செத்து கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது தென்காசி மாவட்டத்தில் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி அருகே வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் இருந்து வாசுதேவநல்லூர் செல்லும் சாலையின் நவாச்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் மது பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். சிறிது தூரம் சென்று பார்த்தபோது பாட்டிலுக்குள் ஈ மற்றும் எறும்பு செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அரசு மதுபானக் கடைக்கு சென்று நான் வாங்கினேன் பிராந்தி பாட்டிலில் ஈ மற்றும் எறும்புகள் உள்ளன என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மதுக்கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மதுக்கடை ஊழியர் பிராந்தி பாட்டில் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக வேற மது பாட்டில் கொடுத்து அனுப்பினார்.

Vignesh

Next Post

ஷாக்!… 3,000 உயிர்களைக் கொன்ற கொடிய சிகிச்சை பேரழிவு!… UK இரத்த ஊழல் மறைக்கப்பட்டது!

Tue May 21 , 2024
UK’s Blood Scandal: 1970கள் மற்றும் 1980களில் கறைபடிந்த இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் எச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஆராய ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தின் பாதிக்கப்பட்ட இரத்த விசாரணையின் இறுதி அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பிரிட்டனின் அரசு நடத்தும் தேசிய சுகாதார சேவையை பாதித்த இந்த ஊழல் மிகவும் கொடியதாகக் […]

You May Like