தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகை, விழுப்புரம், திருப்பூர், மதுரை, தேனி, கடலூர், திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாகை மாவட்டத்தில் விடிய விடிய இடைவிடாது மழை பெய்து வருகிறது. நாகூர், திட்டச் சேரி, திருமருகல் ,கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திருக்குவளை, கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம் , கோடியக்கரையில் மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து செம்பியன் மகாதேவியை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் கவியழகன் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கனமழை எதிரொலி..!! மாணவர்களே உங்கள் மாவட்டத்திற்கு இன்று விடுமுறையா..? முழு விவரம் உள்ளே..!!