fbpx

விஜய் அணிந்திருந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?

விஜய் தன்னுடைய ரசிகர்களை சந்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டபோது அணிந்திருந்த சட்டையின் விலை குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சினிமா நட்சத்திரங்கள் என்றாலே விலை உயர்ந்த உடைகளை உடுத்துவதும் அவர்கள் எந்த விலை உயர்ந்த பிராண்டை பயன்படுத்துகின்றார்கள் என்பதும் சமூக வலைத்தலங்களில் பொதுவாக பேசப்படும் ஒரு டாப்பிக். அந்த வகையில் நடிகர் விஜய் அணிந்த சட்டையின் விலை புருவம் உயரச் செய்துள்ளது. நடிகர் விஜய் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த சில ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க ஏற்பாடுகள் நடந்தது.

நடிகர் விஜய் தனது அலுவலகத்திற்கு சென்றார் இனோவா காரில் சென்ற அவரை ரசசிகர்களின் ஆரவாரத்தோடு ’’ அழகிய தமிழ்மகனாக ’’ வந்திறங்கிய நடிகர் விஜய், வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். மிகவும் ஸ்டைலாகவும் சிம்பிளாகவும் அவர் அணிந்திருந்த உடை அனைவராலும் கவரப்பட்டது. வெள்ளை சட்டையும் அதன் பிராண்டும் மேலும் அதன் விலை நம்மை மிரச்செய்தது.

நடிகர் விஜய் அணிந்து வந்தது BURBERRY என்ற பிராண்ட் வகையைச் சேர்ந்த வெள்ளை நி சட்டை. லோகோ தெளிவாக தெரியும் வகையில் அவர் அணிந்திருக்கின்றார். இது இணைதயத்தில் நெட்டிசன்கள் தேடியபோது BURBERRY பிராண்டை சேர்ந்த Sherwood stretch cotton poplin என்ற வகையை சேர்ந்தது. இது ரூ.32,790 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஒரு மாத ஊதியம் அந்த சட்டையின் விலை என்பது நடிகர்களின் செல்வ செழிப்பை காட்டுவதாக அமைந்துள்ளது

Next Post

இலவச  ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

Mon Nov 21 , 2022
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை, லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. ஊடகவியலுக்குத் தேவையான கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. […]

You May Like