fbpx

குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பணம் பறிப்பு..! வடமாநில தொழிலாளர்களுக்கு வலைவீச்சு..!

புதையலில் பழங்காலத்து தங்கம் கிடைத்ததாக கூறி, ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வடமாநில தொழிலாளர்களை போலீசர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாலு (45). இவர் அங்கு ஓட்டல் ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 15ஆம் தேதி இவரது ஓட்டலுக்கு பெண் உட்பட 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு ஓட்டல் உரிமையாளரிடம் தங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். அப்போது தாங்கள் மத்தியப்பிரதேசத்தில் இருந்து வருவதாகவும், தற்போது கோவையில் மேம்பால பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும், வேலைக்காக குழி தோண்டும்போது அங்கு தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனை குறைந்த விலையில் விற்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பறிப்பு..! வடமாநில தொழிலாளர்களுக்கு வலைவீச்சு..!

பின்னர், அதிலிருந்த ஒரு தங்கக் கட்டியை சாம்பிளுக்கு அவரிடம் காட்டியுள்ளனர். மேலும், கோவை காந்திபுரம் வந்தால் பல லட்சம் மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை வெறும் ரூ.5 லட்சத்திற்கு தருவதாகவும் கூறியுள்ளனர். அவர்கள் பேச்சில் மயங்கிய பாலு இதனை உண்மை என நம்பியுள்ளார். தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி பணத்துடன் ஓட்டல் உரிமையாளர் பாலு காரில் கோவை சென்றுள்ளார். காந்திபுரத்தில் வைத்து அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அதில் ஒருவர் தாங்கள் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஒரு தமிழ்நாடு ஓட்டல் முன்பு தங்க கட்டிகளுடன் நின்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் தருவதாக கூறி ரூ.5 லட்சம் பறிப்பு..! வடமாநில தொழிலாளர்களுக்கு வலைவீச்சு..!

அங்கு சென்ற பாலு அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து தங்கக் கட்டி என நினைத்து போலி தங்கத்தை வாங்கி திருப்பூர் சென்றுள்ளார். பின்னர் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாலு இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி தங்க கட்டி கொடுத்து மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த நவீன காலகட்டத்தில் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் தங்கத்தின் மீதுள்ள ஆசையால் பல நபர்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

Chella

Next Post

எடப்பாடி, ஜெயக்குமார் கட்சியிலிருந்து நீக்கம்..! அதிமுக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு..!

Sun Jul 3 , 2022
எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் ’முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அவருக்கு வத்தலக்குண்டு மக்கள் ஆதரவு. எடப்பாடி பழனிசாமி, நத்தம் […]

You May Like