கரூரை சேர்ந்தவர் செல்வராஜ். பெயிண்டராக வேலை செய்து வரும் இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதியின் மகள், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி கரூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதியிடம் அளித்த புகார் ஒன்று, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகாரில், தனது தந்தை செல்வராஜ் கடந்த சில மாதங்களாக தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருவதாக கடந்த 15.04.2024 அன்று தெரிவித்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் ஏற்கனவே குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செல்வராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி செல்வராஜுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.