குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றேன் என்று சிறையில் இருந்து வெளியான நளினி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர். இதையடு்தது வேலூர் ஆண்கள் சிறையில் இருந்து சாந்தன், முருகன் உள்ளிட்டோரை விடுவித்தனர். பெண்கள் சிறையில் இருந்து நளினி விடுதலையாகி நேற்று வெளியே வந்தார். பின்னர் அவர் காட்பாடியில் பிரம்மபுரத்தில் உள்ள இல்லத்தில் தங்கினார். பத்திரிகையாளரிடம் அவர் பேட்டி அளித்தார்.
அப்போது நளினி பேசுகையில், ’’ விடுதலைக்கு மத்திய மாநில அரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 32 ஆண்டுகள் மிகவும் துயரம் அடைந்தேன். இனி வரும் காலங்களில் கணவர் மன்றும் எனது மகளுடன் நான் சேர்ந்து வாழ நினைக்கின்றேன். இதுதான் என் நீண்ட கால ஆசை. 32 ஆண்டுகளில் சிறையில் இருந்துவிட்டேன். பரோல் அளித்த தமிழக அரசுக்கு நன்றி. பரோல் அளித்ததன் மூலம் எனக்கு விடுதலை கிடைக்க உதவியதற்கும் நன்றி. சிறையில் டெய்லரிங் உள்ளிட்ட பல்வேறு சிறு தொழில்கள் அளித்து உதவி செய்கின்றது. பல்வேறு இன்சூரன்ஸ் திட்டமும் அளித்து வருவது மிகவும் பயனளிக்கின்றது. சிறையில் அதற்கான சான்றிதழ்கள் சரியான முறையில் அளிப்பதில்லை. இனி வரும் காலங்களில் நான் என் குடும்பத்தினருடன் ஒன்றாக வாழ ஆசைப்படுகின்றேன்.