fbpx

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை…

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. பருவ மழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று மதியம் பல்வேறு இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை முதல் 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவே நாளை முதல் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

மூதாட்டி கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டை…. மீண்டும் வெடித்த ஓ.சி. பேருந்து சர்ச்சை…

Tue Nov 8 , 2022
மூதாட்டி ஒருவர் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையால் மீண்டும் ஓ.சி. பேருந்து சர்ச்சை சம்பவம் வெடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விராலிமலைபட்டியில் லட்சமி என்ற மூதாட்டி ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அவர், தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்க வந்த பரிசோதகர் சுப்பிரமணியன் மூட்டையை பார்த்துவிட்டு உங்களுக்குத்தான் இலவசம், மூட்டைக்கு இல்லை என கூறிவிட்டு ரூ.15 கட்டணமாக வசூலித்துள்ளார். அதைத் தொடர்ந்து […]

You May Like