fbpx

கோவை சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு?

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவாளருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

கோவை கோட்டை மேட்டு பகுதியில் கடந்த 23ம் தேதி அதிகாலை கார் ஒன்று சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சசமையல் எரிவாயு வெடித்ததாக கூறப்பட்டிருந்த நிலையில் வெடி பொருட்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பொறியியல் பட்டதாரியான ஜமேஷா முபின்என்பவர் திருமணமாகி மனைவி 2 பெண் குழந்தைகள் இருந்துள்ளது. பழை புத்தகக்கடையில் வேலை பார்த்து வந்திருக்கின்றார். சாலை ஓரத்தில் பழை துணிகளை விற்பனை செய்யும் வேலையை அவர் செய்திருக்கின்றார்.
உக்கடம் எம்ஜிஆர் நகரில் வசித்து வந்த அவர் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் கோட்டை மேடு பகுதிக்கு குடி வந்துள்ளார். 2019ல் இவர் தங்கியிருந்த வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை யிட்டுள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இதே போல ஏற்கனவே இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக அசாருதீன் என்பவர் கைதாகி சிறையில் உள்ளார். அவருடைய நண்பர்தான்இவர் என்பதும் ஐ.எஸ்.ஐஎஸ். அமைப்பில் தொடர்பிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

Next Post

குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தை ... சிகிச்சை பலனின்றி குழந்தை பலி ...

Tue Oct 25 , 2022
மும்பை கோரேகாவ் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன.இந்த சிறுத்தைகளோடு மக்கள் காடுகளில் வீடு கட்டி வசிக்கின்றனர். இதனால் அடிக்கடி சிறுத்தைகள் மனிதர்கள் நடமாடும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. அடிக்கடி மனிதர்களை சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. இதில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். அது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருக்கிறது. கோரேகாவ் ஆரே காலனியில் வசிப்பவர் அகிலேஷ்.இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு மகள் இருந்தார். […]

You May Like