செங்கல்பட்டு மாவட்ட நலசங்கத்தின் கீழ் துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் விவரங்கள்…
1. பதவியின் பெயர் – நுண்ணுயிரியலாளர்
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி : MBBS, MD (Microbiology)/ MBBS with 2 Years Lab Experience or M.Sc (Microbiology)
ஊதியம் : ரூ. 40,000 M.Sc (Microbiology) – ரூ.25,000 வரை வழங்கப்படும்
2. பதவியின் பெயர் – ஆய்வக நுட்புனர்
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி : Diploma Medical Lab Technology course படித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 12,000 வரை வழங்கப்படும்
3. பதவியின் பெயர் – Lab Attendant
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்
ஊதியம் : ரூ. 8,000
மேற்கண்ட பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.08.2023 மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.
முகவரி : நிர்வாகச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், ஜிஎஸ்டி ரோடு, செங்கல்பட்டு
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2023
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/08/2023081651.pdf என்பதை கிளிக் செய்து பார்க்கலாம்.