சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததை பார்த்ததற்காக சிறுவனை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அருகே ஊத்துக்குளி நடுப்பட்டி அருகே தங்கராஜ்-சுமதி தம்பதியினரின் மகன் பவனேஷ்(8).அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடச் சென்ற பவனேஷ்வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகாரளித்ததை அடுத்து விசாரணை நடத்தி வந்தனர் .
மறுநாள், புத்தூர்பள்ளபாளையம் அருகே புதரில் பவனேஷ் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடலை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் சொட்டகவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வத்தின்மகன் அஜித்குமார்(23) சிறுமியுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அஜித்குமாரும், அச்சிறுமியும் தனிமையில் இருந்ததை பார்த்ததாலும், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறியும் வெளியே கூறுவேன் என சிறுவன் தெரிவித்துள்ளான். இதனால் ஆத்திரத்தில் அஜித்குமார் பவனேஷ் வாயில் துணியை வைத்து பாட்டிலால் குத்தியுள்ளனர். அப்படியும் சாகாததால் கல்லால் தாக்கி கொன்றுள்ளனர். பின்னர் உடலை புதருக்கு வீசிவிட்டு தப்பியுள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் அஜித்குமார் மற்றும் சிறுமியை கைது செய்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதன் மீதான தீர்ப்பில் இரட்டை ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்துள்ளார். சிறுமி சிறார் நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டு அந்த வழக்கு தனியாக நடைபெற்று வருகின்றது.