fbpx

இன்று முதல் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…! மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்…!

தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக; இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனீ, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால்… உங்கள் கால்களில் தென்படும் அறிகுறிகள் என்னென்ன?

Sun Oct 2 , 2022
நாள்பட்ட நோயான சர்க்கரை நோய் நாம் உண்ணும் உணவை க்ளூகோசாக மாற்றி செயலாக்குகின்றது என்பதை பாதிக்கின்றது.கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது உடல் உற்பத்தி செய்யும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது  சர்க்கரை நோய் ஏற்படுகின்றது. இதன் அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்…. டைப் 1, டைப் 2 நீரிழிவு, ப்ரீடியாபயாட்டீஸ் மற்றும் கர்ப்பகால நீரிழிவு உட்பட பல்வேறு வகையான நீரிழிவு உடலை பாதிக்கலாம். இருப்பினும், […]

You May Like