fbpx

காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி…! தன்னார்வலர்களுக்கு அழைப்பு

காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்; தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பரமாரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாகவும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும் காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி 2024, கடந்த ஜூலை 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் தலைமையில் துவங்கியது.

செப்டம்பர் மாதத்தில் 5 கட்டங்களாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரிக்கரையின் இருபக்கங்களிலும் 416 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடக்க இருக்கிறது. இதேபோன்று, நாமக்கல் மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் நெடும் பணி தொடர இருக்கிறது.

ஒவ்வொரு ஊராட்சியும் குறைந்தது 1500 விதைகளை சேகரித்தல் மற்றும் நடவு செய்யவும் வேண்டும். இதில் தன்னார்வலர்கள் (மாணவர்கள் / சமூக சேவகர்கள் / தொண்டு நிறுவனங்கள் / சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்) பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர். இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். ஒரு கோடி பணி விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Namakkal District Collector calls for volunteers to participate in the planting of one crore palm seeds in Kavirikkara.

Vignesh

Next Post

ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை..!! ஆசையோடு வாங்கி சாப்பிடும் குழந்தைகள்..!! ஹைதராபாத்தில் அதிர்ச்சி..!!

Sat Sep 7 , 2024
The sale of alcohol-laced ice cream for commercial purposes, which was bought and consumed by children, has caused a lot of controversy.

You May Like