’ஒன்.. ஒன்.. நம்பர் ஒன்’ என தில் ராஜூ பேசியதில் இருந்தே விஜய் ரசிகர்களுக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. நம்பர் ஒன் நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு சூர்யா தான் சூப்பர் ஒன்… என தற்போது சூர்யா ரசிகர்கள் அடித்துள்ள போஸ்டர் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன் படம்’ தியேட்டர்களில் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஆனால், விக்ரம் படத்திற்கு பிறகு, சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக சூர்யா ரசிகர்கள் இப்போ இப்படியொரு போஸ்டரை அடித்துள்ளனர். வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியாக உள்ள நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே கடும் சண்டை நிலவி வருகிறது. மேலும், சூப்பர் ஸ்டார் விஜய் என்கிற பிரச்சனை கிளம்பிய நிலையில், அஜித் ரசிகர்களுடன் கைகோர்த்துக் கொண்டு ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களை எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், எப்பவோ வரவுள்ள படத்தை வைத்துக் கொண்டு சண்டைக்கு நாங்களும் வரலாமா என்பது போல சூர்யா ரசிகர்களும் குதித்துள்ளனர்.
![No.1 No.2 எல்லாம் பாப்பா விளையாட்டு..!! பரபரப்பை கிளப்பிய சூர்யா ரசிகர்கள்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-06-at-2.48.19-PM-1024x682.jpeg)
இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படம் பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பென் ஸ்டூடியோ அந்த படத்தின் இந்தி ரைட்ஸை மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், சூர்யா 42 படத்தின் சூட்டிங்கே இன்னும் முடியாத நிலையில், இப்படியொரு வரவேற்பா என சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதன் விளைவாக அடிங்கடா போஸ்டரை என்பது போல, நம்பர் ஒன்.. நம்பர் டூ எல்லாம் பாப்பா விளையாட்டு.. சூர்யா தான் சூப்பர் ஒன் என ரஜினிகாந்தின் எந்திரன் படத்தின் வசனத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சூர்யா 42 போஸ்டர் பாகுபலியை போல பெரிதாக வரப் போவதாக பாகுபலி சிலை கம்பேரிஸன் படங்களையும் போட்டு அடித்துள்ள போஸ்டர் அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. மதுரையை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் இந்த தரமான சம்பவத்தை செய்துள்ளனர்.