fbpx

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி இல்லையா..? சிஇஓ காசி விஸ்வநாதன் பரபரப்பு பதில்..!

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற ‘மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா’ நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் சிஎஸ்கே வீரர் சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிஇஓ காசி விஸ்வநாதன், “தமிழ்நாடு வீரர்கள் குறைவாக இந்திய அணியில் ஆடுகிறார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. நிறைய தமிழக வீரர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். முன்பு மாதிரி மும்பையில் இருந்து ஏழு பேர் பத்து பேர் எல்லாம் அணியில் கிடையாது. இப்போது எல்லா மாநிலத்தில் இருந்தும் இரண்டு பேர் இந்திய அணியில் விளையாடுகிறார்கள். டிஎன்பிஎல்-யில் இருந்து 13 பேர் ஐபிஎல்-யில் சென்று விளையாடுகிறார்கள்.

அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி இல்லையா..? சிஇஓ காசி விஸ்வநாதன் பரபரப்பு பதில்..!

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார். அதேபோன்று அணியின் கேப்டனாகவும் அவர் நீடிப்பார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற மாவட்ட கிரிக்கெட் அணியினருக்கு கோப்பைகளை ஐபிஎல் வீரர் சாய் கிஷோர் வழங்கினார்.

Chella

Next Post

6,809 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் பாதிப்பு...! 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

Sun Sep 4 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 6,809 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 8,414 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like