fbpx

அக். 25 உள்ளூர் விடுமுறை கிடைக்குமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு ..

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர் .

2022ம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது. வரும் 25ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை ஒட்டி தங்கள் சொந்த ஊரில் சென்று கொண்டாடுவதற்காக ரயில்களில், பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்யாதவர்களுக்கும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றது. சனி , ஞாயிறு, திங்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் அதிக அளவில் கூட்டம் இருக்கும்.

தீபாவளிக்கு அடுத்த நாள் செவ்வாய்கிழமை வேலை நாள் என்பதால் தீபாவளி அன்றே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் இருந்து சென்னை திரும்ப வேண்டும். மன திருப்தியுடன் பண்டிகை கொண்டாடும் வகையில் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு 4.11.2021ம் ஆண்டு தீபாவளி கொண்டாடப்பட்டது. சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆக்கப்பட்டது. வியாழன், வெள்ளி , சனி ஞாயிறு விடுமுறை என்பதால் பயனுள்ளதாக இருந்தது. எனவே அதைப் போலவே இப்போதும் அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவிக்கப்படுகின்றது.

Next Post

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : கேள்வி மேல் கேள்வி கேட்கும் சீமான்…

Wed Oct 19 , 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றிய 17 காவல்துறையினர் மட்டுமின்றி  ஆணையிட்ட அரசு அதிகாரிகள் என இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது. ’’ தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர […]

You May Like