fbpx

’மத்திய அரசின் நிதியை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன’..! – மத்திய அமைச்சர்

மத்திய அரசின் நிதியை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு செயல்படுத்துவதாக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் பேசிய அவர், “ஒவ்வொரு நிதி ஆண்டும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் உள்ளதால், தாமதம் ஆகிறது. இந்த பிரச்சனை ராமநாதபுரத்திலும் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள், பயனாளிகளிடம் கேட்டறிந்தோம். இதுதொடர்பாக கூடுதல் ஆட்சியரிடம் விசாரித்து விரைவில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூறியுள்ளேன்.

ஊராட்சி நிதியை பயன்படுத்தாவிட்டால் அபராத வட்டி - மத்திய அமைச்சர்

ஊராட்சிகளுக்குரிய நிதி ஒதுக்கிய 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு அதனை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், மாநில நிதியில் அபராத வட்டி செலுத்தி அதனையும் ஊராட்சிக்கு பயன்படுத்த வேண்டும். மகாராஷ்டிர மாநிலத்திற்கு இவ்வாறு அபராதம் விதித்துள்ளோம். ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்க வலியுறுத்துகிறோம். ராமநாதபுரத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும். அதனை பெறுவதற்கு முன்பாக நிறைய இடங்களில் வெறும் குழாய் மட்டுமே பதித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன். மத்திய அரசு மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், அதனை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் அந்த விவரங்களை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டுள்ளோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Chella

Next Post

இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும்.. வானிலை மையம் குட்நியூஸ்...

Sat Jul 9 , 2022
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதஇகளில்‌ ஒரு சிலஇடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை […]

You May Like