பா.ஜ.க. முக்கிய தலைவர்கள் அமித்ஷா , மோடி உள்பட பலரும் இந்தியை கற்க வற்புறுத்தி வரும் நிலையில் தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தனி வழியில் செல்கின்றார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்க பயணத்தை நிறைவு செய்த பின்னர் தமிழகம் திரும்பினார். வழக்கம் போல கமலாலயம் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் கூறுகையில் , ’’ இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் திணித்தபோது திமுக 10 ஆண்டுகள் கூட்டணியில்தான் இருந்தது. மத்திய அரசு மூன்று மொழியையும் படிக்க வேண்டும் என கூறி வருகின்றது. தமிழகம் இந்தி கற்பதில் சி.நிலையில் உள்ளது.
வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி , மாணவர் அணி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிகின்றது. ஆனால் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பு என்பது இல்லை. நானும் அங்கு படித்து உள்ளேன். இந்தி திணிப்பு செய்தால் மத்திய அரசை தமிழக பா.ஜ.க எதிர்க்கும் என தெரிவித்துள்ளார். யார் இந்து.. யார் இந்து இல்லை என்பதை கண்டுபிடிப்பது தான் ஃபேஷன் ஆக உள்ளது. பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இல்லை என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே திமுக தலைவர் ஸ்டாலின் தற்பொழுது பாஜகவை எதிர்க்கட்சியாக அவரே நினைக்கிறார். முதலமைச்சருக்கு இரண்டு விதமான பயம் வந்துள்ளது முதலில் அவருடைய கட்சியில் யார் என்ன செய்வார்கள் என்றும். இரண்டாவது பயம் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி இவை இரண்டும் சேர்த்து அவரின் தூக்கத்தை கெடுப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.
இதுவரை பா.ஜ. தலைவர்கள் இந்தி கற்க வலியுறுத்தி வந்த நிலையில் என் வழி தனி வழி என்பது போல , மத்திய அரரை எதிர்ப்போம் என்று அண்ணாமலை கூறியிருப்பது பிரம்மிப்பாக உள்ளது..