fbpx

சிறுநீர் கழிக்க சென்ற சிறுமி..!! சீரழிக்க முயன்ற முதியவர்..!! பதறியடித்துக் கொண்டு தாயிடம் அழுத பரிதாபம்..!!

டியூசன் படிக்க வந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அங்குள்ள ஊராட்சி பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், இவர் செண்பகவள்ளி என்பவரிடம் டியூசன் படித்து வருகிறார். வழக்கம் போல டியூசனுக்கு சென்ற சிறுமி, சிறுநீர் கழிப்பதற்காக அந்த வீட்டின் பின்புறம் சென்றிருக்கிறார். அப்போது, செண்பகவள்ளியின் தந்தை தர்மலிங்கம் (வயது 65), சிறுமியை அருகில் அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

சிறுநீர் கழிக்க சென்ற சிறுமி..!! சீரழிக்க முயன்ற முதியவர்..!! பதறியடித்துக் கொண்டு தாயிடம் அழுத பரிதாபம்..!!

இது தொடர்பாக சிறுமியின் தாயார், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், போலீஸ் வருவதை அறிந்த தர்மலிங்கம் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டார். 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ள ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Chella

Next Post

துணிவு படத்தில் ஆளுநருக்கு எதிரான வசனம்..? உதயநிதியின் மாஸ்டர் பிளான்..? வரவேற்கும் நெட்டிசன்கள்..!!

Wed Jan 11 , 2023
நடிகர் அஜித்தின் துணிவு படத்தில் இடம்பெறும் வசனம் ஒன்று, இன்றைய அரசியல் சூழலை பிரதீபலிக்கும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை ஒரு மணிக்கு திரையிடப்பட்டது. இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து பாசிடிவ் கமெண்டுகளை கூறி […]
துணிவு படத்தில் ஆளுநருக்கு எதிரான வசனம்..? உதயநிதியின் மாஸ்டர் பிளான்..? வரவேற்கும் நெட்டிசன்கள்..!!

You May Like