fbpx

பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய நபர்..? காவல்துறையை அலறவிட்டவர் அதிரடி கைது..!

திருச்சி ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், தான் மனித வெடிகுண்டாக மாறப்போவதாகவும் பேசிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த 23ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மனித வெடிகுண்டு என்றும், திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்போவதாகவும் மேலும் தகாத வார்த்தைகளை கூறி வசைபாடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் திருச்சி ரயில்வே சந்திப்பு முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய நபர்..? காவல்துறையை அலறவிட்டவர் அதிரடி கைது..!

ஆனால், எந்த விதமான வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் துரித விசாரணைக்கு தனிப்படை அமைத்து விசாரணை செய்ய அறிவுறுத்தினார். விசாரணையில், காவல்துறை அலுவலகத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டவர், புதுக்கோட்டை மாவட்டம் திருவள்ளூர நகரை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரை பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த செயலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.

Chella

Next Post

பிரதமரின் படம் இல்லாமல் போஸ்டரா? செஸ் ஒலிம்பியாட் போஸ்டரில்.. பிரதமரின் படத்தை ஒட்டிய பாஜகவினர்..!

Wed Jul 27 , 2022
தமிழகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி […]
செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் எங்கே..? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி..!

You May Like