fbpx

ஆப்பிள் ஹெட்போன் மீது ஆசைப்பட்டதால் வந்த சோகம்…

மதுரையில் ஆப்பிள் ஹெட்செட்டுக்கு ஆசைப்பட்டு சென்ற நபரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஜெய்ஹிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). மர வேலை செய்து வரும் இவர் ’பப்ஜி’ விளையாட்டு மீது இருந்த மோகத்தால் அறிமுகம் இல்லாத நபருடன் விளையாடி வந்துள்ளார். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியைச் சேர்ந்த வினோத், தினேஷ், சின்னமணி, இந்துகுமார் போன்றவர்களுடன் நட்பு ஏற்பட்டு விளையாடி வந்தார்.

இந்நிலையில் அவர்கள் ’’நாங்கள விலை உயர்ந்த ஆப்பிள் ஹெட்போன் வைத்திருக்கின்றோம்’’ என்று பப்ஜி விளையாட்டுக்கு இந்த ஹெட்போன்தான் நன்றாக இருக்கும் என்று கேட்டு ஆசையை தூண்டியுள்ளனர்.

சந்தோஷ் குமாருக்கு ஆசை அதிகமானது. ஆப்பிள்ஹெட்போனை நாமும் வாங்க வேண்டும் என நினைத்துள்ளார். அதன் விையை கேட்டபோது ’’காசு கொடுக்க வேண்டாம், கூடுதலாக நாங்கள் வைத்துள்ள ஹெட்போனை தருகின்றோம் என கூறி ராமநாதபுரத்திற்கு நேரில் வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’’ என தெரிவித்துள்ளனர்.

இதனால் நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் தன் நண்பர் யோகேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்திலேயே மதுரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார். உச்சிப்புளி அருகே பெருங்குளம் சுங்கச்சாடிக்கு இருவரையும் வரவழைத்து அங்குள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர். கத்தியை காட்டி மிரட்டி ரூ.12000 பணத்தை பறித்துள்ளனர். இதுதொடர்பாக உச்சிப்புளி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தினேஷ், சின்னமணி, உள்பட 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மற்ற 3 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

Next Post

புயல் வாய்ப்பு பற்றி பிரதீப் ஜான் தகவல்..

Mon Nov 14 , 2022
அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் மாற்றங்கள் ஏற்படுவதுபற்றிய தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு இங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தின் வானிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.  நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. […]
#Alert..!! நெருங்கும் புயல்..? தமிழகத்தில் நவ.11 வரை இடி மின்னலுடன் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

You May Like