மருத்துவப் பணியாளர்கள் என்றால் நம்பிக்கையுடன் வீட்டுக்குள் அனுமதிக்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளம்பெண் உள்ளிட்ட இருவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்கள் போல வேடமிட்டு வந்த அவர்கள், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி நகையைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம், வெள்ளை நிறக் கோட், மருத்துவப் பரிசோதனை என்ற அறிமுகம் எனத் திட்டமிட்டு செயல்பட்டதாகக் கூறப்படும் இந்தச் […]