தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் உரையாற்றும் முன் தனது பெற்றோரிடம் ஆசி பெற்றார் விஜய். இதனைத் தொடர்ந்து மாநாட்டில் பேசிய அவர், சீரியஸ் நெஸ்சுடன் சிரிப்பையும் கலந்து அரசியல் செய்வேன். பாம்பை கண்டால் படையும் நடுங்கும். ஆனால், குழந்தை ஒரு பாம்பை பார்த்தால் பயப்படாமல் அதை பிடித்து விளையாடும். இங்கு பாம்பு தான் அரசியல். அதை பிடித்து விளையாடும் குழந்தைதான் நான்.
ஏற்கனவே உள்ள அரசியல் வாதிகளை பற்றி பேச நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. தவெகவின் கொள்கை, கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தான் மாறனுமா.? ஏன் அரசியல் மாறக்கூடாதா..? பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாலே போதும். மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்.
பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை முன்னோடிகளாக ஏற்போம். கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை. சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனையை முன்னெடுப்போம். நாம் செய்ய நினைப்பதை பிசிறில்லாமல் செய்வோம் என்றார். பிளவுவாத சக்திகளை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், ஊழலை கண்டுபிடிக்க முடியாது” என்றார்.
Read More : ”மாநில அரசுகளின் சுய மரியாதையை சீண்டும் ஆளுநர் பதவி தேவையற்றது”..!! தவெகவின் செயல்திட்ட அறிக்கை..!!