fbpx

பள்ளி மாணவியை பெண் கேட்ட நபருக்கு நடந்த துயரம்……

பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்த இளைஞர் பெண் கேட்டு சென்றபோது அவமானம் ஏற்பட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணா மலை மாவட்டத்தில் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர். இதனால் அவரை பெண் கேட்டு செல்ல நினைத்த சாம்ராஜ் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார்.

அப்போது மாணவியின் தந்தை இளைஞரை கன்னத்தில் அறைந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி குடும்பத்தினரிடம் வருந்தியுள்ளார். சில நாட்களாக வருத்தமாகவே காணப்பட்ட நிலையில் வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தினர் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இந்த தற்கொலையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமே சேர்ந்து கோரிக்கை வைத்துள்ளது. மாணவியின் தந்தை தாக்குதல் நடத்தியதால்தான் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.

இளைஞர் தரப்பில் புகாரை ஏற்ற பின்னர் உறவினர்கள் சடலத்தை வாங்கிக் கொண்டு இறுதி சடங்கிற்கான பணியை தொடங்கினர். இந்நிலையில் புகாரின் பேரில் மாணவியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு..!! கூடுதல் இழப்பீடு..!! 4 போலீசார் பணியிடை நீக்கம்..!! முதல்வர் அதிரடி

Wed Oct 19 , 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை. […]
’இபிஎஸ் வாழ்க’..!! முழக்கமிட்ட முன்னாள் அமைச்சர் விரட்டி அடிப்பு..!! பசும்பொன்னில் பரபரப்பு..!!

You May Like