fbpx

தமிழக மக்களின் பேராதரவோடு முதல்வராகும் விஜய்..? கூட்டணிக்கு அழைப்பு..!! பரபரப்பு

தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு இடங்களில் பரபரப்பான அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய், சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேனியில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு இடங்களில் பரபரப்பான அரசியல் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அரசியல் கட்சிகளை விஜய் தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பது உள்பட பல்வேறு அரசியல் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

தமிழக மக்களின் பேராதரவோடு முதல்வராகும் விஜய்..? கூட்டணிக்கு அழைப்பு..!! பரபரப்பு

நாளைய முதல்வர் ”தமிழக மக்களின் பேராதரவோடு 30 ஆண்டுகள் சினிமாவில் வெற்றி. அடுத்த 30 ஆண்டு அரசியல் வெற்றி. முதல்வராக தமிழக மக்களின் பேராதரவோடு எதிர்பார்ப்பு”. ”அரசியல் கட்சிகளுக்கு… கூட்டணி அழைப்புக்கு தளபதியாரின் தலைமையில் தயாராகுங்கள்”. ”வெற்றிடத்தை நிரப்ப வரும் தமிழகத்தின் செல்ல பிள்ளை எங்கள் முதல்வரே”. ”இன்று சினிமாவில் தளபதி. நாளைய தமிழகத்தின் முதல்வரே”. ”இன்றைய இளைஞர்களின் கனவு முதல்வரே. தமிழக மக்களின் கனவை நினைவாக்க வரும் நாளைய தமிழக முதல்வரே” என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

Chella

Next Post

#கள்ளக்குறிச்சி : இன்று முதல் கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு!!!

Mon Dec 5 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார். இதையடுத்து பள்ளியின் முன்பு நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, பள்ளி பேருந்துகள், முக்கிய ஆவணங்களை தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், […]
கனியாமூர் தனியார் பள்ளியை அரசே ஏற்று நடத்துகிறதா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

You May Like