நாடு முழுவதும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம், மக்கள் உற்சாகத்துடன் அதிகாலையிலேயே எழுந்து நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்புகள் மற்றும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து இந்த ஒளியின் திருநாளைக் கொண்டாடினர்.
இருப்பினும், தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தீ விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாகச் சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. குறிப்பாக, பல மருத்துவமனைகளிலும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தீபாவளி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்ததில், மாநிலம் முழுவதும் இதுவரை 13 இடங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தெரிவித்துள்ளது. இதில், தலைநகர் சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : கடன் பிரச்சனை, தொடர் தோல்விகள்..!! வாழ்க்கையை மாற்றும் வாராகி அம்மன் வழிபாடு..!! இந்த நாளை மறந்துறாதீங்க..!!



