தீபாவளியையொட்டி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பண்டிகைகால சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்புச் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.தீபஒளி திருநாளில் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வாடிக்கையாளர் முதல் நீண்ட கால சந்தாதார்கள் வரை தனிநபர் வாடிக்கையாளர் முதல் வர்த்தக நிறுவனங்கள் வரை என ஒவ்வொரு பிரிவினருக்கும் பண்டிகைகால சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
மேலும், இந்த சிறப்பு சலுகைகள் மூத்த குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதிவரை பல்வேறு தொலைத்தொடர்பு சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் விரிவான சலுகைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய வாடிக்கையாளர்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குள் வரவேற்கும் விதமாக 4ஜி மொபைல் சேவையை தீபாவளி சலுகையாக ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த மொபைல் சேவைகளை செயலாக்கும் வகையில் புதிய வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாயை கட்டணமாகச் செலுத்தி, உச்சவரம்பற்ற சேவையை பெறும் வகையில், பரிசாக பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது.இந்தச் சலுகை இம்மாதம் 15-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை பதிவு செய்யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



