தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க மெகா கூட்டணியை அமைத்துள்ளது.. 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.. அதாவது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் திமுக கூட்டணியின் இடம்பெற்றுள்ளன.
இந்த 26 கூட்டணி கட்சிகளில் சுமார் 20 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி, தி.மு.க. 152 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு மொத்தமாக 82 தொகுதிகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் தங்களது தனிச்சின்னத்தில் அல்லாமல், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல்
தி.மு.க. – 152
காங்கிரஸ் – 28
தே.மு.தி.க. – 10
வி.சி.க. – 8
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 6
இந்திய கம்யூனிஸ்ட் – 6
மதிமுக – 6
தமிழக வாழ்வுரிமை கட்சி – 2
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2
மனிதநேய மக்கள் கட்சி – 2
மக்கள் நீதி மய்யம் – 2
மனிதநேய ஜனநாயக கட்சி – 1
எஸ்.டி.பி.ஐ. – 1
முக்குலத்தோர் புலிப்படை – 1
கொங்கு இளைஞர் பேரவை – 1
தமிழர் தேசம் கட்சி – 1
அனைத்திந்திய பார்வர்டு பிளாக் – 1
முக்குலத்தோர் முன்னேற்ற கழகம் – 1
ஆதி தமிழர் பேரவை – 1
மக்கள் விடுதலை கட்சி – 1
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் – 1
Read More : “2030-ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்..” முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்..!



