திமுக நிர்வாகி மீது தாக்குதல்.. சீமான் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

c4d848065561b101eae88e633fe274bf 1

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார்.. இந்த மாநாடு முடிந்து வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சரமாரியாக தாக்கினர்.. தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்று சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த சம்பவம் பெரும் பரப்பரை ஏற்படுத்தியது..


இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சீமான் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ரங்கன் அளித்த புகாரின் பேரில் விருதாச்சலம் போலீசார் சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. பொது இடத்தில் ஆபாசமாக பேசுவது, கூட்டமாக வந்து தாக்குவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. அதே போல் நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் ரங்கநாதன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

Read More : காந்தி மீது பாஜக அரசுக்கு வன்மம்.. வறுமையை ஒழித்துச் சாதனை படைத்த தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது – CM ஸ்டாலின் கடும் கண்டனம்..!

RUPA

Next Post

மாதம் ரூ. 3,000 முதலீடு செய்தால், ரூ. 20 லட்சம் பெறலாம்.! இது இந்தியாவின் சிறந்த சேமிப்புத் திட்டம்..!

Mon Dec 15 , 2025
வருமானம் குறைவாக இருக்கும்போது சேமிப்பது கடினம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. சீராகவும் ஒழுக்கத்துடனும் முதலீடு செய்வதன் மூலம் ஒரு சிறிய தொகையைக் கூடப் பெருக்க முடியும். இதற்கான சிறந்த வழி பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (PPF) ஆகும். இது அரசாங்கத்தின் ஆதரவைக் கொண்டது மற்றும் சந்தை அபாயங்களை எதிர்கொள்ளாமல் நீண்ட காலத்திற்குப் பணத்தைச் சேமிக்க உங்களை அனுமதிக்கிறது. மாதம் வெறும் ரூ. 3,000 […]
Money Rupees

You May Like