ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர்..! பின்னணி சேகர்பாபு..? ஆதாரங்களை வெளியிட்ட அமைச்சர் ரமேஷ்..!!

Ramesh 2026

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்தது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள எண்ணற்ற கோயில்களுக்கு பக்தர்கள் தர்ம காரியங்களுக்காகவும் நலப்பணிகளுக்காகவும் வழங்கிய சொத்துக்கள் கடந்த காலங்களில் திட்டமிட்டு சூறையாடப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.


தனது சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் திமுக பகுதிச் செயலாளர் அலுவலகம் அமைத்து இயங்கி வருவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஆய்வு செய்தபோது, பல அதிர வைக்கும் ஆவண ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக கூறினார்.

1866-ம் ஆண்டிலேயே 329 ஏக்கர் நிலங்கள் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு உரியவை எனச் சொத்துரிமை பத்திரம் எண் 1027 மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து 1910-ல் இனாம் கமிஷனரும், 1930 ‘ஏ’ பதிவேடும், 1998 இனாம் தீர்ப்பாயமும் இந்நிலங்கள் கோயிலுக்கே சொந்தம் என்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்துள்ளன. 2020-ல் கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நிலங்களை அறநிலையத்துறையின் ஒப்புதலின்றி விற்கவோ, வாங்கவோ கூடாது எனப் பத்திரப்பதிவுத் துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டதுடன், 2023-ல் இந்நிலத்திற்கு உரிமை கோரித் தொடரப்பட்ட வழக்கையும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இத்தகைய வலுவான வரலாற்று ஆவணங்கள் சர்வே எண் 762-க்கு இருக்கும் நிலையில், மூலப்பத்திரம் தொலைந்துவிட்டதாக புதுச்சேரி காவல் நிலையத்தில் ஒரு பொய்ப் புகாரைப் பதிவு செய்து, அந்த என்ட்ரி சான்றை மட்டுமே அடிப்படையாக வைத்து, தனியார் நிலம் போல் காட்டி திமுக பகுதிச் செயலாளர் தன் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. வருவாய்த்துறை, காவல்துறை, பத்திரப்பதிவுத்துறை, அறநிலையத்துறை என அரசின் நான்கு முக்கியத் துறைகளையும் ஏமாற்றி, ஒரு சாதாரணப் பகுதிச் செயலாளரால் மட்டுமே ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துவிட முடியாது என்றும், இதற்குப் பின்னால் அன்றைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் மற்றும் திமுகவின் செல்வாக்குமிக்கப் புள்ளிகளின் நேரடித் தலையீடு இருந்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

சட்டமன்றத்தில் “சிவன் சொத்து குலநாசம்” என்று வாய்வீரம் பேசியவர்கள், பெருமாளின் சொத்தைத் தங்களது சொந்தக் கட்சிக்காரர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா என்று அமைச்சர் சாடினார். “கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி கோயில் சொத்துக்களை மீட்டோம் என மார்தட்டிக்கொண்டவர்கள், உண்மையில் சொத்துக்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தார்களா அல்லது கட்சி அலுவலகம் கட்ட திமுகவிடம் ஒப்படைத்தார்களா?” என்ற கேள்வியை ஸ்ரீரங்கம் மக்களின் சார்பாகத் தாம் முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விஞ்ஞானபூர்வ முறைகேடு தொடர்பாக முழுமையான ஆவணங்களுடன் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்தார்.

Read More : முதல்வர் விஜய் குறித்து நான் அப்படி பேசினானா? முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி..!! விஜய் டிவி வெளியிட்ட வீடியோ..!!

Next Post

என் தியாகத்திற்கு மார்க் போட உங்க எவனுக்கும் தகுதி இல்ல..! என்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களுக்கு நன்றி..! ஸ்டாலின் ஆவேசம்..!

Sat Sep 19 , 2026
சென்னையில் நடந்த திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் பங்கேற்றுத் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை பலம் கூட இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் தயவில் இயங்கும் தவெக அரசு, அவர்களையே நம்பாமல் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதும், அவற்றுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுமே தற்போதைய அரசின் சாதனையாக உள்ளது என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “முதல்வர் தொடர்ந்து […]
stalin vijay

You May Like