சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அள்ள சொன்ன திமுக எம்எல்ஏ..? வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு..!!

தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் மீது அவ்வபோது விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அதன்படி, சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கார்ப்பரேஷன் ஊழியர் வெறும் கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ததாக குறிப்பிடப்பட்ட அந்த வீடியோவை தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பியிருக்கிறது. அதனை சமூக செயற்பாட்டாளரான ஷாலின் மரியா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘துப்புரவு பணியாளரை வெறும் கையால் சாக்கடையை அள்ள தி.மு.க. எம்.எல்.ஏ வற்புறுத்தியிருக்கிறார். இது மனித கழிவுகளை மனிதர்களையே அள்ள வைப்பதற்கு எதிரான சட்டத்தை மீறும் செயல். இது புதிதாக நடக்கும் நிகழ்வல்ல. ஆனால், முதல் முறையாக பொது வெளிச்சத்துக்கு வீடியோவாக வந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக துப்புரவு பணியாளர்கள் வெறும் கையில்தான் கழிவுகளை அள்ளுகிறார்கள். இப்படி வெறும் கையால் துப்புரவு வேலை செய்வதால் அதிகளவு இறப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. ஆனால், மாநில அரசோ அதனை கண்டுகொள்ளவில்லை’ என காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ஷாலின் மரியா லாரன்ஸின் இந்த ட்விட்டர் பதிவு வைரலான நிலையில், தி.மு.க எம்.எல்.ஏ எபினேசர் அந்த குற்றச்சாட்டை மறுத்ததோடு கண்டனமும் தெரிவித்து அதே பதிவில் பதிலளித்திருக்கிறார். அதில், ‘இது நியாமற்ற குற்றச்சாட்டு. துப்புரவு பணி மேற்கொள்ளும்படி கார்பரேஷன் ஊழியரை எம்.எல்.ஏ வற்புறுத்தினார்’ என்ற பதிவை திரும்ப பெறாவிடில் இது குறித்து புகார் கொடுக்க நேரிடும். என்னிடம் முழு வீடியோவும் இருக்கிறது. நான் அந்த ஊழியரிடம் பேசவே இல்லை. அது முதலில் சாக்கடை கழிவே இல்லை. அது குடிநீர் தேக்கம். குறிப்பிட்ட அந்த செய்தியில் ‘எம்.எல்.ஏ வற்புறுத்தினார்’ என இருக்கிறதா? பாதி எடிட் செய்யப்பட்ட செய்தியை வைத்து எப்படி நீங்களாக ஒரு முடிவுக்கு வருவீர்கள்? கார்ப்பரேஷன் J.E-யிடம் ‘நீங்க செய்யலனா நான் வேணா கிளீன் பண்ணட்டுமா கை விட்டு’ என்றுதான் கூறினேன்.’ என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ எபினேசர் தெளிவுபடுத்தியிருக்கிறார். இருப்பினும், தூய்மை பணியாளர் தன்னுடைய கைகளால் அப்படி சுத்தம் செய்வதை எம்.எல்.ஏ தடுத்து நிறுத்தியிருக்க வேண்டுமென்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/JJEbenezer1/status/1610516707952689152?s=20&t=Q50vn8XSlND1aPUi-pynwQ

Chella

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை! முதலமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!

Wed Jan 4 , 2023
சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலின்போது அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தனர். அதுவும் அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு யுத்திகளை கையாண்டது. அதோடு பல கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கியது. இதில் குறிப்பிடத்தக்க வாக்குறுதி என்னவென்றால், மாதம்தோறும் குடும்பத் தடவைகளுக்கு 1500 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அதிமுக […]

You May Like