சோகம்.. திமுக மூத்த தலைவர் காலமானார்.. அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

passes away 2

திமுகவின் நீண்ட கால உறுப்பினரும், தொமுச முன்னாள் தலைவருமான இரெ.கோவிந்தசாமி காலமானார். திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவையின் அதிகாரப்பூர்வ மாத இதழ் ‘உழைப்பாளி’யின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் எம்.பி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.


தொழிற்சங்கச் சேவையையும், பத்திரிகை ஆசிரியர் பங்கையையும் திறம்பட தொடர்ந்ததன் காரணமாக, பல அரசியல் தலைவர்களும், ஊடகத்துறையினரும் மதிக்கும் நபராக இருந்தார். அவரது மறைவு, தொழிலாளர் நலனுக்காக நடந்த போராட்டங்களையும், அவரது தியாக மனப்பாங்கையும் மீண்டும் நினைவுகூரச் செய்கிறது. சென்னை மேற்குத் தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில், உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read more: TVK Vijay: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையுமா தவெக..? – திட்டவட்டமாக விஜய் சொன்ன பதில்

English Summary

DMK senior leader passes away.. Political parties express condolences..!!

Next Post

போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி!. பணத்திற்காக பாலியல் தொழில்!. 19 இளைஞர்களுக்கு HIV-ஐ பரப்பிய பகீர்!

Fri Aug 8 , 2025
உத்தரகண்ட்டில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு 19 ஆண்களுக்கு எச் ஐ வி வைரஸ் தொற்றை பரப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்கிறது […]
17 year old girl HIV 19 men 11zon

You May Like