DMK: இணையத்தில் வைரலான வீடியோ…! திமுக-வின் மலிவு அரசியல் எல்லையை தாண்டிவிட்டது…!

பெண்களைக் குறி வைத்து அவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் திமுக-வின் மலிவு அரசியல் இன்று எல்லையைத் தாண்டிவிட்டது.

திருச்செந்தூரில் திமுக எம்பி கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்; நான் நாளிதழில் விளம்பரம் போடும்போது, அதில் தவறுதலாக சீன ராக்கெட்டின் படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிரதமர் மோடி சீன நாட்டு பிரதமருடன் மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேஷ்டி சட்டையுடன் சுற்றுலாவாக பயணித்தார். மேலும் பிரதமர் மோடி, காமராஜர் பற்றி புகழாரம் பாடினார். காமராஜர் டெல்லியில் இருந்த போது அவரை கொல்ல முயற்சித்ததாக கூறி பாஜகவினரை ஒருமையில் பேசினார். மேலும், காமராஜரைப் பற்றி பேச இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்; அண்ணா அறிவாலயத்தினர் எப்பொழுது தான் திருந்துவீர்கள் ? நமது தேசத்தையும் மொழியையும் நதியையும் தாயாக நினைத்து போற்றும் இந்த புண்ணிய பாரதத்தில், பெண் சக்தியை மதித்து வணங்கும் மாசற்ற மாமனிதர் நம் பாரத பிரதமர் மோடி அவர்கள். ஆனால், பெண்களைக் குறி வைத்து அவர்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் திமுக-வின் மலிவு அரசியல் இன்று எல்லையைத் தாண்டிவிட்டது.

ஒரு பாரத பிரதமரின் தாயாரைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் உங்கள் மமதைக்கு நிச்சயம் அழிவு உண்டு. பெண்ணியப் போராளி என பெருமைப் பீற்றிக் கொள்ளும் கனிமொழி இந்த பேச்சை விரும்பி ரசித்துக் கேட்டது தான் கேவலத்தின் உச்சம். பெண்களை ஆபாசமாக விமர்சிக்கும் உங்களுக்கும் உங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கும் முடிவுரை எழுத துவங்கிவிட்டனர் நம் தமிழக மக்கள் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Onion: வெங்காயம் ஏற்றுமதி தடை நீட்டிப்பு...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Sun Mar 24 , 2024
வெங்காயம் ஏற்றுமதி தடை நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெங்காயத்தின் ஏற்றுமதிக்கான தடை, மார்ச் 31ம் தேதி வரை தொடரும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8, 2023 அன்று, அரசாங்கம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு மார்ச் 31 வரை தடை நீக்கப்பட்டது. மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை […]

You May Like