இந்த பச்சரிசியை விநியோகிக்கக் கூடாது..!! ரூ.500 தாள்கள் மட்டுமே..!! பொங்கல் பரிசுத்தொகுப்பில் திடீர் உத்தரவு..!!

பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை அன்னை சத்யா நகரில் உள்ள ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத்‌ தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த பச்சரிசியை விநியோகிக்கக் கூடாது..!! ரூ.500 தாள்கள் மட்டுமே..!! பொங்கல் பரிசுத்தொகுப்பில் திடீர் உத்தரவு..!!

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொங்கல் தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோகிக்கக் கூடாது. இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும். சில்லறை மாற்றித் தரக்கூடாது. கரும்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது. 6 அடி அல்லது அதற்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பள்ளி விழாவில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம்..! மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி...!

Mon Jan 9 , 2023
கேரளா மாநிலம் கீழ்வாய்ப்பூரில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட சில பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். கடந்த வாரம் தேவாலயத்தில் ஞானஸ்நானம் வழங்கும் நிகழ்வின் போது இதேபோன்ற சம்பவம் பதிவாகிய ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. கீழ்வாய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை […]

You May Like