மக்களே நியாபகம் இருக்கா..? நாளையே கடைசி..!! உடனே வேலையை முடிச்சிருங்க..!!

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோர்கள் குறித்த முறையான தகவல்களை பெறும் நோக்கில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக ஜனவரி 31ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு நாளை (பிப்ரவரி 15) வரை மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காமல் உள்ள மின் நுகர்வோர்கள் விரைந்து பணியை முடிக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Chella

Next Post

”பயிற்சி கொடுக்குறேன்னு சொல்லி என்னை படுக்க வச்சு”..!! பிளஸ்1 மாணவியை கர்ப்பமாக்கிய பயிற்சியாளர்..!!

Tue Feb 14 , 2023
நாமக்கல் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில், அவர்கள் தங்குவதற்காக பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக கோவை தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி, தனது தந்தையுடன் வந்தார். பின்னர் மாணவியும், […]

You May Like