டீயுடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடுறீங்களா..? என்னென்ன பாதிப்புகள் வரும்னு தெரிஞ்சுக்கோங்க..

biscuit tea

பலர் தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் தேநீரில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடுவதை ஒரு சாதாரண பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த சிறிய பழக்கம் கூட உடல்நலத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


தேநீரில் தோய்த்த பிஸ்கட்களைச் சாப்பிடுவது, இரத்தச் சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். குறிப்பாக அதிகாலையில் இதை எடுத்துக்கொண்டால், உடல் வெறும் வயிற்றில் இருப்பதால், சர்க்கரை உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடும். இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் உயர வாய்ப்பு அதிகம். இந்த நிலை, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது.

“ஒரு பிஸ்கட் தான்…” என்று நாம் நினைத்தாலும், உண்மையில் பிஸ்கட்டுகளில் அதிக கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் மைதா, சர்க்கரை, சில நேரங்களில் டிரான்ஸ் கொழுப்பு ஆகியவை சேர்ந்து, உடல் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். இதனால், உடல் எடை அதிகரிப்பு, வயிற்றுப் பகுதி கொழுப்பு சேர்தல், இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance) அபாயம், போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

மேலும் தேநீரும் பிஸ்கட்டும் சேர்ந்த கலவை உங்கள் இதய ஆரோக்கியத்திற்குச் சிறிதும் நல்லதல்ல. இது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதன் விளைவாக, இதயத்தின் செயல்பாடு குறைகிறது. எனவே உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் டீ காபியுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பிஸ்கட்களில் கொழுப்பின் அளவு மிக அதிகமாக உள்ளது. இது பல செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். பிஸ்கட்கள் மற்றும் தேநீர் ஆகிய இரண்டுமே செரிமானப் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் அதிகமாகத் தேநீர் அருந்தினால், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம்.

பலர் தேநீர் மற்றும் பிஸ்கட் சாப்பிட்ட பிறகு புத்துணர்ச்சி அடைகிறார்கள். ஆனால்… இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தக்கூடும். இவை இரண்டிலும் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. இவற்றைச் சாப்பிடுவதால் எந்தப் பயனும் இல்லை.

இந்த இரண்டின் கலவையும் பற்களுக்கு நல்லதல்ல. பல்வலி மற்றும் பல் சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பிஸ்கட்களில் உப்பின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், இரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால்தான், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவறுதலாகக் கூட இந்த இரண்டையும் சாப்பிடக்கூடாது.

Read more: எடப்பாடி பழனிச்சாமி என் மீது கொலை வெறியில் இருக்கிறார்.. அதற்கு காரணம் இதுதான்..! – சீக்ரெட்டை உடைத்த செங்கோட்டையன்..

English Summary

Do you eat biscuits with tea? Find out what the consequences are.

Next Post

UPI பயனர்களே.. இனி ரூ. 10,000க்கு மேல் பணம் அனுப்ப கட்டுப்பாடு..! RBI புது ரூல்..

Fri Apr 10 , 2026
Digital payment rules could soon change, as the Reserve Bank plans to impose a one-hour cooling period on transfers above Rs 10,000.
RBI

You May Like