தினமும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதை விட ஒரு மணி நேரம் நடப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆனால் மாதவிடாய் காலத்தில் நடப்பது சரியா என்று பலருக்கு சந்தேகம் உள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கூறும் கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.
மாதவிடாய் காலத்தில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்:
இரத்த ஓட்டம் சீராக இருக்கும்: மாதவிடாய் காலத்தில் நடப்பது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த நேரத்தில் ஏற்படும் வலியையும் இது குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது தவிர, வயிறு உப்புசம் போன்ற பல உடல் பிரச்சினைகளைத் தீர்க்க நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மன அழுத்தம் குறைகிறது: மாதவிடாய் காலத்தில் நடப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்தில் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மிகவும் முக்கியம். மன அழுத்தத்தில் இருந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மனநிலை மேம்படும்: நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மனநிலையை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் நடப்பது, ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்க உதவும்.
மாதவிடாய் காலத்தில் நடப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:
இரத்தப்போக்கு அதிகரிக்கிறது: சில பெண்கள் ஏதேனும் உடல் செயல்பாடுகளைச் செய்தால் இரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலியை அதிகரிக்கக்கூடும். எனவே, அத்தகைய பெண்கள் நடைபயிற்சி போன்ற பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
தசை சோர்வு: மிகவும் தீவிரமாகவோ அல்லது அதிக நேரம் நடப்பதோ உங்கள் தசைகளை விரைவாக சோர்வடையச் செய்யும். இது அதிக கால் வலிக்கு வழிவகுக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது.