பலருக்கு டீ அல்லது காபியையோ குடிக்காவிட்டால் அன்றைய தினமே எதையோ மிஸ் செய்வது போல உணர்வார்கள்.. குளிர்காலமோ.. வெயில் காலமோ டீக்கடையில் மட்டும் எப்போதும் கூட்டம் நிறைந்து இருக்கும். மதிய நேரத்தில் கூட பலரும் டீ, காபி அருந்தும் பழக்கம் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
டீ, காபியை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் சாப்பிட்டால், உணவின் மூலம் இரும்பு சத்து கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் எனவும் இதனால் அனீமியா போன்ற குறைபாடுகள் வரலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
செரிமான பிரச்சனை: உணவுக்குப் பிறகு தேநீர் குடிப்பதால், நாம் உண்ணும் உணவில் உள்ள சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். இதன் விளைவாக, செரிமான பிரச்சினைகள் அதிகரிக்கும். தேநீரில் அதிக காஃபின் உள்ளடக்கம் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் தேநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
இதய ஆரோக்கியம்: சாப்பிட்ட உடனே தேநீர் குடிப்பதால் அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துவது நல்லது. இந்தப் பழக்கம் காலப்போக்கில் இதயத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். இதயத் துடிப்பும் அதிகரிக்கக்கூடும்.
உயர் இரத்த அழுத்தம்: உணவுக்குப் பிறகு தேநீர் குடிப்பது இரத்த அழுத்தப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். தேநீரில் உள்ள காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவுக்குப் பிறகு தேநீர் குடிக்காமல் இருப்பது நல்லது.
இரும்புச்சத்து குறைபாடு: இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தேநீர் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேநீரில் டானின் என்ற பொருள் உள்ளது. இது இரத்தத்தில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எனவே, சாப்பிட்ட உடனேயே தேநீர் குடிப்பது நல்லதல்ல. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், டீனேஜர்கள் அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு நீண்ட காலத்திற்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படலாம்.
Read more: மகளிர் உரிமை தொகை: உங்க விண்ணப்பத்தோட நிலையை ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..!! எப்படி தெரியுமா..?