ஹீரோவாக நடித்த முதல் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்!

rajinikanth 2

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார்.. 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரஜினி முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.. தற்போது 75 வயதாகும் ரஜினிகாந்த் தனது துள்ளலான நடிப்பு, ஸ்டைலான நடிப்பு மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வருகிறார்..


பாக்ஸ் ஆபிஸாகவும், ரெக்கார்டு மேக்கராகவும் இருந்து வருகிறார்.. அதனால் தான் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர்.. தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருகிறார்.. கடைசியாக அவர் நடித்த கூலி படத்திற்கே ரூ.250 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது..

ஆனால் முதன்முதலாக ரஜினி ஹீரோவாக நடித்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? 1975-ம் ஆண்டு வெளியான பைரவி படம் ரஜினியின் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகும்.. இந்த படத்தில் நடிகர் ரஜினி முதன் முதலில் லீட் ரோலில் நடித்திருந்தார்.. பைரவி படத்திற்கு ரூ.50,000 மட்டுமே சம்பளம் வாங்கினாராம்..

இதுகுறித்து நடிகர் ரஜினியே ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார்.. அதில் பேசிய ரஜினி “ நான் ஹீரோவாக வேண்டும் என்று ஒருபோதும் விரும்பியதில்லை.. வில்லன் கேரக்டரில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தேன்.. பஸ் கண்டக்டராக இருந்து நடிகராக மாறியதே எனக்கு விஷயம்.. நான் ஸ்கூட்டர் வாங்கிய போதே மகிழ்ச்சியாக இருந்தேன்.. ஒரு சிறிய ஃபிளாட் வாங்க திட்டமிட்டேன்..

41 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞானம் அவர்கள் என்னை சந்தித்தார்.. அது வில்லன் கேரக்டராக இருக்கும் என்று நினைத்து அதில் நடிக்க மறுத்துவிட்டேன். மேலும் 50,000 சம்பளம் வேண்டும் என்று கேட்டேன்.. ஏனெனில் வில்லன் கதாப்பாத்திரங்களுக்கு அதை விட குறைவாகவே சம்பளம் வாங்கினேன்.. அப்போது தான் அவர் என்னை திரும்பவும் அணுகமாட்டார் என்று நினைத்தேன்.. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக அவர் அடுத்த நாளே ரூ.50,000 அட்வான்ஸை என்னிடம் வந்த் கொடுத்தார்.. பைரவி படத்திற்காக என்னை ஒப்பந்தம் செய்தார்..” என்று தெரிவித்தார்..

Read More : HBD Rajinikanth : சென்னையில் ஆடம்பர பங்களா; பல சொகுசு கார்கள்.. இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..!

RUPA

Next Post

“ எல்லாம் தேர்தல் நாடகம்; மக்கள் மீது அக்கறை இல்லை..“ மகளிர் உரிமை தொகை விரிவாக்கம்.. அதிமுக கடும் விமர்சனம்..!

Fri Dec 12 , 2025
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் 17 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இன்று ரூ.1,000 உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தில் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் இந்த உரிமைத் தொகையைப் பெற்றுப் பயனடைந்து […]
Stalin EPS 2025

You May Like