நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.
நடிகராக மட்டும் இல்லாமல் தனது பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி சிறப்பாக நடத்தி வருகின்றார். அண்மையில் வயநாடு பகுதி முழுவதும் நிலச்சரிவினால் பெரும் அழிவைச் சந்தித்தபோது, இவரது தன்னார்வ தொண்டு நிறுவனம் அரசுடன் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது. மலையாளத்தில் கர்வம் இல்லாத நடிகர் என்றால் அதில் மம்முட்டியின் பெயரைக் குறிப்பிடலாம்
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி தமிழ் சினிமாவிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராக பட்டித்தொட்டி செங்கும் புகழ் பெற்ற மம்மூட்டி நடிக்க வரும் முன்பு என்ன வேலை செய்தார் என உங்களுக்கு தெரியுமா.
அவர் பிஏ மற்றும் எல்எல்பி ஆகிய படிப்புகளை முடித்துவிட்டு மூன்று வருடம் வக்கீல் ஆக பணியாற்றினாராம். அதன் பிறகு படங்கள் நடிக்க தொடங்கியதால் அவர் அந்த தொழிலை விட்டுவிட்டார். மம்மூட்டி நடிக்க வரவில்லை என்றால் ஒரு பெரிய கிரிமினல் லாயர் ஆகி இருப்பார் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.