இது என்ன பானிபூரின்னு தெரியுமா..? இதை சாப்பிட்டிருக்கீங்களா?

ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் தெருவோர உணவு வகைகளில் பெரும்பாலானோரின் முதல் விருப்பமாக இருப்பது பானிபூரி தான். வட இந்தியாவில் உணவு வகையான பானிபூரியை அதிகம் பேர் விரும்புவர். தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பானிபூரி பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். இதில் பேல்பூரி, பானிபூரி மசாலா போன்ற பல வகை உணவு உள்ளது. பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் சிறிது மாற்றம் செய்து புதுவித உணவை தயாரிப்பார்கள். அதில், சில உணவுகள் மக்களிடம் வரவேற்பை பெறும். சில உணவுகளை மக்கள் விரும்பமாட்டார்கள்.


அந்த வகையில், பானிபூரியில் மாற்றம் செய்து அதில் இனிப்பு சுவையுடன் கூடிய சாக்லேட் ப்ளேவரில் பானிபூரி தயாரிக்கப்பட்டது. இதன் நடுவில் ஐஸ்கிரீம் மற்றும் ஓரியோ பிஸ்கட்டுடன் வைத்து பரிமாறப்படும். ஆனால், இந்த வகை பானிபூரியை மக்கள் அதிகம் பேர் விரும்பவில்லை. அதன் காம்பினேஷன் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. இந்த சாக்லேட் பானிபூரி வீடியோவை ஒரு யூடியூப் சேனல் வெளியிட்டுள்ளது. வீடியோவில், பானிபூரி விற்கும் ஒருவர், சில சாக்லேட் பானிபூரிகளை தட்டில் வைத்து, அதன் மேல் ஐஸ்கிரீம் மற்றும் உடைத்த ஓரியோ பிஸ்கட் துண்டுகளை வைத்து நிரப்புகிறார். தொடர்ந்து அதில் சாக்லேட் சிறப் ஊற்றி வாடிக்கையாளருக்கு பரிமாறுகிறார்.

CHELLA

Next Post

சகோதரிகளின் கர்ப்பை காப்பாற்றிய பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!! வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

Fri Mar 17 , 2023
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். 42 வயதான இவர், கட்டிட மேஸ்திரி ஆக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 9ஆம் வகுப்பும், இளைய மகள் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். பார்த்திபன் தனது 2 மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். […]

You May Like