நவீன வாழ்க்கை முறை மனிதனை உடல் உழைப்பிலிருந்து விலக்கி, நீண்ட நேர அமர்வு, மன அழுத்தம், தூக்கக் குழப்பம் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மனக்கவலை போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதைத் தவிர்க்க பலர் எளிதானவும் பாதுகாப்பானவும் ஆன நடைப்பயிற்சியை தங்களின் தினசரி பழக்கமாக மாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நடைப்பயிற்சி செய்வது மட்டுமல்ல, எந்த நேரத்தில் நடக்கிறோம் என்பதும் மிக முக்கியம் என யோகா குரு மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் டாக்டர் ஹம்சா யோகேந்திரா தெளிவுபடுத்தியுள்ளார். சரியான நேரத்தில் நடக்கும்போது தான் உடலும் மனமும் முழுமையான ஆரோக்கிய பலன்களைப் பெற முடியும் என அவர் கூறுகிறார்.
பெரும்பாலானவர்கள் சூரிய உதயத்திற்கு முன் நடப்பதே மிகச் சிறந்தது என்று நம்புகின்றனர். ஆனால் அந்த நேரத்தில் காற்றில் மாசுத் துகள்கள், தூசிகள் நிலைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். இது நுரையீரலுக்குள் நேரடியாகச் சென்று மூச்சுத் திணறல், அலர்ஜி, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தலாம் என ஹம்சா எச்சரிக்கிறார். அதனால், காலை நடைப்பயிற்சியை சூரிய உதயத்துக்குப் பிறகு, காலை 6.30 முதல் 8 மணி வரை மேற்கொள்ளுவது சிறந்தது.
இந்த நேரத்தில் காற்று சுத்தமாக இருக்கும், சூரிய ஒளி மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் D கிடைக்கும், உடல் மெதுவாக சுறுசுறுப்புக்கு திரும்பும், இதனால் நாளெங்கும் உற்சாகமாக செயல்பட முடியும். மாலையில், குறிப்பாக 4 மணி முதல் சூரிய அஸ்தமனம் வரை நடப்பது உடலுக்கு அதிக நன்மை தரும்.
இந்த நேரத்தில் தசைகள் ஏற்கனவே இருக்கத்தில் இருப்பதால் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும், காயம் ஏற்படும் அபாயம் குறையும், நாள் முழுவதும் சேரும் மன அழுத்தம் குறையும். வேலை முடிந்த பின் மாலை நடைப்பயி₹இ செய்வது மன அமையை தருவதுடன், நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது.
நடைப்பயிற்சியை பயனுள்ளதாக மாற்ற உதவும் ஆலோசனைகள்:
தண்ணீர்: நடப்பதற்கு முன் மற்றும் பின் தண்ணீர் குடிக்க வேண்டும்
இயற்கை சூழல்: சாலைகளைக் காட்டிலும் பூங்கா, மரங்கள் நிறைந்த இடங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
மெதுவான தொடக்கம்: உடல் பழகும் வரை குறைந்த நேரத்தில் நடந்து, பின்னர் அதிகரிக்க வேண்டும்
ஒழுங்குமுறை: வாரத்திற்கு ஒரு நாள் அல்ல; தினமும் நடப்பதே உண்மையான பலனை தரும்.



