சென்னை வண்டலூரை அடுத்துள்ள முக்கிய பகுதியில் ஸ்கைவாக் வசதியுடன் புதிய ரயில்நிலையத்தை அமைக்க உள்ளதாக போக்குவரத்து குழுமம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் தான் இந்த புதிய ரயில் நிலையம் அமைய உள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்குப் பயணிகள் வந்து செல்ல வசதியாக கேளம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம்அமைக்க தெற்கு ரயில்வேயிடம் சென்னை போக்குவரத்து குழுமம்அனுமதி கோரியிருக்கின்றது. ஒப்புதல் கிடைக்கும பட்சத்தில் பேருந்து நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள ரயில் நிலையத்தையும் ஆகாய நடைபாதை மூலமாக இணைக்க சென்னை போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. சுமார் 314 கோடியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. இங்கு புறநகர் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக, புறநகர்பேருந்துகளுக்கு தனியாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் வரும் ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இதனால் கோயம்பேட்டிலிருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்திற்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை , கன்னியாகுமரி , கோயம்புத்தூர் , சேலம் , போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
எனவே கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளின் வசதிக்காக புதிய ரயில் நிலையம் ஆகாய நடைபாதை அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய உள்ளது.
சாலை வழியாக மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வசதிகள் உள்ளது. மின்சார ரயில் கிளாம்பாக்கத்தில் இல்லை. பண்டிகை காலத்தில் அனைவரும் சாலை வழியாக வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதை தடுக்க கிளாம்பாக்த்தில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அனுமதி கோரி தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஊரப்பாக்கம் , வண்டலூருக்கு இடையே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படலாம்.